(அன்ஸிர்)
இலங்கையை பூர்விகமாக கொண்ட தற்போது பிரான்ஸில் வாழ்ந்து வரும் 2 இளைஞர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிஸ் ஆகியுள்ளனர்.
மொஹமட் ஜபாயிஸ் நுஹ்மான் மற்றும் சவ்பான் ஸஜீஹ் அஹ்மத் ஆகியோரே இவ்வாறு ஹாபிஸ் ஆகியுள்ளனர்.
இவர்களுக்கு ஹாபிஸ் பட்டம் வழங்கும் நிகழ்வு நேற்று 19-06-2023 பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸில் செயற்படும் குஜராத்திய மதரஸாவில் இவர்கள் இந்த பட்டங்களை பெற்றுள்ளனர்.
குறித்த நிகழ்வில் ஹாபிஸ் பட்டம் பெற்றவர்களின், பெற்றோர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள், இஸ்லாமிய பிரச்சாரகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இவ்வாறு இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர்கள் தொழில், படிப்பு, பொழுது போக்கு அம்சங்களிடையே புனித அல்குர்னையும் மனனமிட்டு ஹாபிஸ் ஆகியுள்ளமை பாராட்டத்தக்க விடயங்களாகும்.
நாமும் வாழ்த்துவோம், நாமும் பாராட்டுவோம்
No comments:
Post a Comment