குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ் குவைத்தில் நாடு கடத்தப்பட்டு இன்று -28- அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் 59 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனவும் மீதமுள்ள மூன்று பேர் ஆண் பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக விடுதிகளில் தங்கி, பல்வேறு பணியிடங்களில் மாதந்தோறும் பணிபுரியும் இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment