Saturday, August 26, 2023

3 பௌத்த பிக்குணிகள் பொலிஸில் சரணடைவு


மினுவாங்கொட - பொரகொடவத்தை பகுதியிலுள்ள பௌத்த பிரிவெனா ஒன்றில் கல்வி கற்றுவந்த நிலையில் மூன்று பௌத்த பிக்குணிகள் காணாமல்போனதாக தகவல் வெளியாகியது.


இந்நிலையில் குறித்த மூன்று பௌத்த பிக்குணிகள், நுவரெலிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த பௌத்த பிரிவெனாவில் பணிபுரிந்த 32 வயதுடைய பெண் ஒருவரும் அவர்களுடன் இருந்ததாகவும், அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் 11, 15 மற்றும் 18 வயதுடைய குறித்த பிக்குணிகள் கடந்த ஜூலை 25ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயிருந்ததாக தெரியவந்துள்ளது.     

No comments:

Post a Comment