Sunday, August 13, 2023

போலி செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம்


கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது.


பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.


இவ்வாறான போலி செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜயசுந்தர கூறியுள்ளதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment