Wednesday, November 29, 2023

மரதன் ஓட்டப்பந்தய வீரர் வெட்டி படுகொலை


களனி வனவாசல புகையிரத வீதி பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் மரதன் ஓட்டப்பந்தய வீரரான ராஜா என்கிற ரணசிங்கே சரத் என தெரியவந்துள்ளது.


நீண்ட காலமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment