Tuesday, December 26, 2023

15 வயதுடைய மாணவன் உயிரிழப்பு


 தனது நண்பர்களுடன் கல்பொட நீர்வீழ்ச்சியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடுகன்னாவ தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் பசிந்து சமோத் என்பவரே இன்று (செவ்வாய்க்கிழமை 26) மதியம் உயிரிழந்தவராவார்.


நண்பர்கள் குழுவுடன் புகையிரதத்தில் கல்பொடவுக்கு வந்த இவர் கல்பொட நீர்வீழ்ச்சியின் ஆழமான பள்ளத்தில் குதித்து நீராடும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


நீரில் மூழ்கிய மாணவனை நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 சுவா சரிய அம்புலன்ஸ் மூலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவன் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment