Saturday, December 30, 2023

அதிகமாக சிக்கிக் கொள்ளும் பெண்கள்


நாடளாவிய ரீதியில் இவ்வருடம் இணையத்தின் ஊடாக இடம்பெற்ற பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப்பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி தெரிவித்துள்ளார்.


தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு விசேடமாக பெண்களே சிக்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment