(எம்.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய பிரதேசமான ஆலம்குளம் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் பொருட்டு பிரதேச செயலகத்தினால் சேவை வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இன்போது அதிதிகள் மக்களின் சேவை வழங்கும் நிலையத்தினை திறந்து வைத்ததுடன், நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர். இது தவிர அரச அதிபரின் சேவையைப் பாராட்டி பிரதேச மக்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் குறிப்பிடுகையில், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வேலைத்திட்டங்களை அரச உத்தியோகத்தர்கள் நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.
நகர்ப் புறங்களில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிரதேச மக்கள் அன்றாடம் தமக்காக வேண்டிய அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர. இவ்வாறாக மக்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களை நிவர்த்தி செய்து மக்களின் காலடியில் சேவைகளை வழங்குவதற்காகவே இவ்வாறாக சேவை வழங்கும் நிலையங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இச்சேவை வழங்கும் நிலையங்கள் அமையப்பபெற்றுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் மக்கள் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான ஆலம்குளத்தில் அமையப் பெற்றுள்ள இச்சேவை வழங்கும் நிலையம் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் தலைமையிலான நிருவாகத்தினர் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டிருக்கின்றனர். இப்பிரதேசத்தின் தேவைகளை எதிர்காலத்தில் நிவர்;த்தி செய்வென தன்னாலான முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment