Wednesday, January 22, 2014

அக்கரைப்பற்று முதலியார் வீதியை உடன் புனரமைப்புச் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை





(எஸ்.அன்சப் இலாஹி)



அக்கரைப்பற்றின் பிரபல பாடசாலைகளான ஆயிஷா பாலிகா மகாவித்தியாலயம், அரசினர் ஆண்கள் வித்தியாலயம், முனவ்வறா கனிஷ்ட கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு செல்லும் முக்கிய வீதியாக உள்ளது. அத்துடன் மிகப்பழைமை வாய்ந்த வீதியுமாகும்.



மழை காலங்களில் இப்பாதையினால் செல்லும் சுமார் 3500 ற்கும் மேற்பட்ட

மாணவ, மாணவிகள் செல்லும் பாதை இதுவரை புனரமைக்கப்படாது குன்றும்,குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் பாடசாலை மாணவர்கள் இப் பாதையினால் செல்லும் போது வெள்ளை நிற ஆடைகள் காவி நிறமாக மாறி வருவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மிகக் கஸ்ரத்திற்கு மத்தியில் கல்வி கற்கவரும் ஏழை மாணவர்களின் நிலையோ மிக மோசமாக உள்ளது.



அக்கரைப்பற்றில் பாதைகள் புனரமைத்து வரப்படுகின்ற போதிலும் இவ் வீதியை மெசின் கொண்டு மட்டமாக்கி சமப்படுத்தினால் கூட, போக்குவரத்திற்கு ஓரளவு இலகுவாக இருக்கும். பழைழை வாய்ந்த பாதையாக இருந்தும் பலவருடகாலமாக யார் கண்ணிலும் படாமல் கிரவல் குன்றாக உள்ளமையை இட்டு கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.



எனவே மழை காலமானாலும், வெயில் காலமானாலும் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் குன்றும் குழியமாகவுள்ள இப்பாதையை போக்குவரத்துச் செய்யுமளவிற்கு உரிய அதிகாரிகள் கனவமெடுத்து புனரமைத்துத் செய்து தருமாறு அக்கரைப்பற்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.









No comments:

Post a Comment