Wednesday, January 22, 2014

சார்ஜாவில் இலங்கையரின மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி அமைதியாக இருந்தது ஏன்..?



ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு இலங்கை பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து ஏன் அமைதியாக இருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.



கொலை குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை சேர்ந்த தொழிலாளியான ரவிந்திரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.



அவர் நியாயமான விசாரணை பெற்றுக்கொள்ள சட்ட உதவியோ, சட்டத்தரணிகள் உதவிகளையே பெற முடியாமல் போனதாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.



நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்பதை சர்வதேச மன்னிப்புச் சபையும் உறுதிப்படுத்தியது.



இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட நாடளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க,



இலங்கையின் தொழிலாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து கொண்டிருந்தார்.



இலங்கை பிரஜை தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்பதை அந்நாட்டு தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பற்ற ஜனாதிபதி தலையிடாதது மிகவும் வருந்தத்தக்கது.



இலங்கை பிரஜையான கிருஷ்ணபிள்ளை தொடர்பில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்பதை ஜனாதிபதிக்கு அங்குள்ள தூதுவர் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிக்க தவறியிருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment