(Tw) அழும் குழந்தைக்கு பால் மாவை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பால்மா குறைந்த விலையில் கிடைக்காத போதிலும் ஹெரோயின் போதைப் பொருளை 60 ரூபா முதல் 70 ரூபாவுக்கு நாடு முழுவதும் இலகுவாக பெற முடியும்.
மோசடிமிக்க இன்றைய அரசாங்கம் ஹெரோயின் போதைப் பொருளை கொள்கலன்களில் இறக்குமதி செய்கின்றது. பெருமளவு எத்தனோல் மதுசாரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இவற்றை தடுத்து நிறுத்தவோ, அவற்றை நாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை சீரழிக்கும் நபர்களை தண்டிக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை.
இப்படியான மிகப் பெரிய மோசடிகளில் ஈடுபடும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே விரட்டியடிக்க முடியும். இதனால் நாட்டை நேசிக்கும் சகலரும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் செய்த இடையூறுகள் இன்னும் நினைவில் உள்ளது.
அவருக்கு உணவை எடுத்துச் செல்ல அனோமா பொன்சேகாவிடம் வாகனம் இருக்கவில்லை. எனது வாகனத்திலேயே பொன்சேகாவுக்கு அவர் உணவை கொண்டு சென்றார்.
தாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருப்பதாக அனோமா அன்று என்னிடம் கூறினார். எனினும் அவர் நன்றி மறந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோமிழைத்துள்ளார் என்றார்.
No comments:
Post a Comment