Thursday, January 23, 2014

குவைத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு



குவைத் நாட்டில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குவைத் நாட்டின் ஜிபிலிஅல்சுவாக் பிரதேசத்தில் இலங்கை பணிப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



மின் விசிறியில் தொங்கிய நிலைலயில் குறித்த பெண்ணிண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தங்கியிருந்த இடத்தில் குறித்த பெண்ணிண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது



சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment