Thursday, January 23, 2014

ஜனாதிபதி என் மீது கோபங் கொண்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை - மேர்வின் சில்வா



(Gtn) ஜனாதிபதி என் மீது அன்பு வைத்திருக்கின்றார் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். சிலர் ஜனாதிபதி தம்மை வெறுப்பதாக கருத்திக் கொண்டுள்ளதாகவும் உண்மையில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



ஜனாதிபதி மட்டுமன்றி ஒட்டுமொத்த டி.ஏ. ராஜபக்ஷ குடும்பத்தாரும் தம் மீது நேசம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தம்மீது கோபங் கொண்டுள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர் எனவும் அதில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



சிறு பிராயம் முதலே டி.ஏ. ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருக்கமானவராக தாம் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment