Tuesday, January 28, 2014

வருவாரா..? வரமாட்டாரா..??



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு சில அரசியல் தம்மை கோரியுள்ளன. எனினும் தாம் அதற்கு உடன்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இந்தக்கருத்தை அவர் வெளியிட்டார்.



தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமது எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பயமான சூழ்நிலை காரணமாக எவரும் இலங்கை தொடர்பில் பேச முன்வருவதில்லை என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment