Monday, February 24, 2014

பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் சக வாழ்வை கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்


(ஏ.எல்.ஜுனைதீன்)



இலங்கையில் சமய சகிப்புத் தன்மையையும் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சக வாழ்வையும் கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கையில் பிரபல்யமான பௌத்த கல்விமான்களுக்கும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாரை மாவட்டக் கிளையின் முஸ்லிம் உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெற்றது.



இனங்கள் தொடர்பான சர்வதேச ஆய்வு மத்திய நிலையத்தின் அனுசரணையுடன் அம்பாரை நகரில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கொழும்பு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத் தலைவருமான கலாநிதி நிமால் றன்ஜித் தேவசிறி அவர்களும் கொழும்பு திறந்த பல்கலைக்கழகப் பட்டப்பின் ஆங்கிலக் கற்கைக்கான நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹர்சனா றம்புக்வெல்ல அவர்களும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாரை மாவட்டக் கிளையின் உறுப்பினர்களான டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் (தலைவர்) டாக்டர் ஏ.எல்.பாறுக் (உபதலைவர்) ஜனாப். ஏ.எல்.ஹாறூன் (அம்பாரை பள்ளிவாசல் தலைவர்) எம்.எஸ்.ஜெலீல் (இணைப்பாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கொழும்பில் இருந்து வருகை தந்த தூதுக்குழுவினர் அம்பாரை சங்க சபையின் பிரதம பௌத்த குருவான . கிரிந்திவெல சோமரத்ன தேரரையும் சந்தித்து எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடி அவரின் ஆசியையும் பெற்றுள்ளனர்.









No comments:

Post a Comment