கல்முனைக்குடி 9ஆம் பிரிவு பள்ளிவீதியிலுள்ள வடிகானில் மழை நீர் தேங்கி நிற்பதால் சுற்றுச்சூழல் அசுத்தமடைந்துள்ளதாகவும் இதனால் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச வாசிகள் கவலைதெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஹுதாப்பள்ளிவாயல் மற்றும் றய்யான் பள்ளிவாயல் ஆகிய பிரதேசத்தையூடறுத்துச்செல்லும் வடிகானில் மழைநீர் ஓடமுடியாமல் மிக நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கின்றது. இங்கு கழிவுப்பொருட்களும் குப்பைகளும் போடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பலமுறை கல்முனை முதல்வரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் இவற்றைத் துப்பரவு செய்ய கல்முனை மாநகரசபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் இந்தப்பிரச்சினையைத்தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்முனைப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment