Monday, February 24, 2014

பௌத்தத்தை பாதுகாக்க முன்னுரிமை, ஏனைய மதங்களை பாதுகாக்க அர்ப்பணிப்பு - ஜனாதிபதி மஹிந்த



எந்தவிதமான பிரிவினைகளும் இன்றி அனைத்து மதங்களையம் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



கேரகல பத்மாவதி பிரிவெனயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.



பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் அதேவகையில் ஏனைய மதங்களுக்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.



சில அரசியல் கட்சிகள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிழையான சித்தரிப்புகளை தோற்றுவித்தாலும், அரசாங்கம் அனைத்து இனங்களுக்கும் சமதன்மைகளுடன் பணியாற்றிவருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.



இலங்கையின் எதிர்கால சந்ததியினர் புதிய தொழினுட்பங்களை பயன்படுத்தி நன்மை தீமைகளை புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.



அதற்கு பெற்றோரும் அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தமது உரையில் சுட்டிக்காட்டினார்.


No comments:

Post a Comment