இங்கிலாந்தில் வீடுகளில் ஏற்படும் சண்டைகளில் ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இங்கிலாந்தில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ஆண்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று சமீபத்தில் புள்ளிவிவரத்தில் தகவல் வெளியிடப்பட்டது. பத்து பேரில் ஒரு ஆண் பலாத்காரம் செய்யப்படுகிறார். 13 வயதுக்கு மேற்பட்ட 12 சதவீதம் பேர் இப்படி பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் வீடுகளில் கணவன், மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளில், ஆண்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்தில் வீடுகளில் ஏற்படும் சண்டைகளில் (டொமஸ்டிக் வைலன்ஸ்), சராசரியாக ஆண்டுதோறும் 12 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு பெண் குடும்ப சண்டைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மற்றும் வேலஸ் பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சத்து 84 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு புகார்கள் பதிவாகி உள்ளன. ஐந்தில் ஒரு ஆண் குடும்ப சண்டைகளில் பாதிக்கப்படுகிறார்.
உடல் ரீதியான தாக்குதல், தற்கொலை செய்து கொள்வேன், போலீசில் புகார் கூறுவேன் போன்ற மிரட்டல்கள், உணர்ச்சி வசப்பட்டு வாய்க்கு வந்தபடி திட்டுதல், பாலியல் ரீதியான கொடுமைகள், உள்நோக்கத்துடன் தாக்குதல் போன்றவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு அமைப்பு கூறுகையில், Ôதற்போது இந்த அமைப்பை சேர்ந்த நிபுணர்கள், பிரத்யேக பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், வன்முறைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்வார்கள்Õ என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதார துறை இயக்குனரும் பேராசிரியருமான மைக் கெல்லி கூறுகையில், Ôநாம் நினைப்பதை விட குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்Õ என்றனர்.
No comments:
Post a Comment