Friday, February 28, 2014

'என்னுடன் விளையாட வேண்டாம்' - ரவூப் ஹக்கீமுக்கு மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை





(நஜீப் பின் கபூர்)



அரசிலிருந்து வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அரசுக்கு எதிராக செலற்றுகின்ற நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது உங்களுக்கு எங்கள் நடவடிக்கைகள் வேலைத்திட்டங்களுடன் ஒத்துப்போக முடியாவிட்டால் நீங்கள் உங்களுடைய ஆட்களை எடுத்துக் கொண்டு அரசியலில் இருந்து வெளியேறுவது தொடர்க எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கச அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.



இதற்குப் பதிலளிக்க முயன்ற ரவூப் ஹக்கீம் எங்களுடைய கட்சியிலுள்ள பிரச்சினை எனக்குத்தான் தெரியும். அந்த அழுத்தங்கள் காரணமாகத்தான் நான் முஸ்லிம்கள் தொடர்பாக நவநீதன் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி ஏற்பட்டது.



இதுவிடயத்தில் நான் உங்களைச் சந்திக்கப் பல முறை சந்தர்ப்பம் கேட்டாலும் அது கிடைகாக நிலையில்தான் இது நடந்தது என்று நிலமையை அவர் சமளிக்க முனைந்த போது ஆத்திரம் கொண்ட ஜனாதிபதி நீங்கள் எப்போதும் இப்படித்தான் உங்களை எனககுத் தெரியாதா பல கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டுக்களை அமைத்துக் கொண்டு ஆளும் தரப்பிலும் இருந்து கொள்ள முனைகின்ற ஒருவர்தானே.! என்னுடன் இந்த விளையாட்டை செய்ய வரவேண்டாம் என்றும் ஜனாதிபதி அங்கு பேசி இருக்கின்றார்.



நீங்கள் வேண்டுமானால் உங்களுடைய ஆட்களை எடுத்தக் கொண்டு ஆளும் தரப்பிலிருந்து நீங்கள் வெளியேறமுடியும் என்று கடும் தொணியில் ஜனாதிபதி பேச அமைச்சர் ஹக்கீம் அதற்கு எந்தப்பதிலும் சொல்லவில்லை. இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஹக்கீம் என்னை கழுத்தால் பிடித்து வெளியே தூக்கி எறியும் வரை அரசுடன்தான் நான் ஒட்டிக் கொண்டிருப்பேன் இருப்போன் என்று அடம்பிடித்ததும் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும்.




1 comment:

  1. intha thimirana soll engaludanum vechikathinga allah udan diarect connection udaya samuthayam

    ReplyDelete