(Tm) வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட ஆளில்லா விமானம் 'கேலமா' இன்றுவரையிலும் திரும்பவில்லை என்று வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜய முனி சொய்சா தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்த காலத்தில் புலிகள் இருந்த வனாந்தரங்களுக்கு மேலே சென்று தரவுகளை திரட்டிவந்து இராணுவத்திற்கு வழங்கிய ஆளில்லா விமானமே 'கேலமா' இந்த செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.
உடவளவ வனாந்தரத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிவதற்காக இந்த விமானம் வானத்திற்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் திரும்பவில்லை.
சிங்கபூர் பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து சுமார் 3 இலட்சம் ரூபா செலவில் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த ஆளில்லா விமானம் வனாந்தரத்திற்குள் காணாமல் போகியிருக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment