Monday, February 24, 2014

சாய்ந்தமருதின் நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட ஒழுக்கு நிவர்த்திக்கப்பட்டது.


(எம்.வை.அமீர்)




சாய்ந்தமருது 10 பிரிவுக்குட்பட்ட தோணவின் அருகில் செல்லும் நீர் விநியோக குழாயில் இருந்து நீண்ட நாட்களாக நீர் ஒழுக்கு ஏற்பட்டிருந்தது. தோணவில் மழை நீர் நிரம்பி இருந்ததால் குறித்த நீர் ஒழுக்கை கண்டு பிடிப்பதில் நீர் விநியோக சபையின் சாய்ந்தமருது அலுவலக ஊழியர்கள் மிகுந்த கரிசணையுடன் செயற்பட்டனர். இருந்த போதும் குறித்த நீர் ஒழுக்கை கண்டுபிடிக்க முடியாது பாரிய தேடுதலில் ஈடுபட்டனர். இதன் ஒரு அங்கமாக தோணவில் இருந்த பாரிய அளவிலான நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.



இதன் பயனாக இன்று குறித்த நீர் ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக சீர் செய்யப்பட்டது. இன்று காலைமுதல் மேற்கொண்ட திருத்தப்பணியின் காரணமாக இன்று முழுவதும் சாய்ந்தமருதுக்கான நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தது.



குறித்த திருத்த பணிகள் சாய்ந்தமருது நீர் விநியோக சபை அலுவலகத்தின் OIC எஸ்.எல்.ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பொறியியல் உதவியாளர் எம்.ஏ.ஜப்பார் மற்றும் எம்.எம்.முனவ்வர் போன்றோருடன் எம்.எஸ்.எம்.சபான் உள்ளிட்ட குழுவினரும் பங்கு கொண்டிருந்தனர்.











No comments:

Post a Comment