உடல் பருமன் நோய் சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, உடல் பருமன் நோய் வராமல் தடுக்க மருத்துவ ரீதியில் சிசிக்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உடல் பருமன் குறித்து உலக சுகாதார நிறுவனம் 36 நாடுகளில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.
அதில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் குழந்தைகள் அதிக அளவில் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் 27 சதவீதம் பேரும், 11 வயதுக்குப்பட்டவர்களில் 27 சதவீதம் பேரும் உள்ளனர். இவர்களில் சிறுவர் மற்றும் சிறுமிகளும் அடங்குவர்.
கிரீஸ் (33 சதவீதம்), போர்ச்சுக்கல் (32 சதவீதம்), அயர்லாந்து (30 சதவீதம்), ஸ்பெயின் (30 சதவீதம்) நாடுகளில் அதிக அளவில் உடல் பருமன் குழந்தைகள் உள்ளனர்.
அதே நேரத்தில் நெதர்லாந்து (13 சதவீதம்), சுவிட்சர்லாந்து (11 சதவீதம்) ஆகிய நாடுகளில் குறைந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் காரணமாக இங்கு வாழ்பவர்களின் செயல்பாடுகள் மிகவும் குறைந்த அளவில் உள்ளன.
எனவே, இனிவரும் தலைமுறைகள் உடல் பருமன் இன்றி வாழ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஷீஷானா ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment