இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷவே தெரிவாக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபைக்கான வேட்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் இருக்கும் நபர்களில் நான் வெறுப்பது எனது தந்தையை கொலை செய்த துமிந்த சில்வாவை மட்டுமே.
அரசாங்கத்தில் இருப்பவர்களில் ஜனாதிபதி, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, பீலிக்ஸ் பெரேரா, குமார வெல்கம ஆகியோர் எனக்கு விருப்பமானவர்கள்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோசி சேனாநாயக்க, ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் எனக்கு பிடித்தமானவர்கள்.
எதிர்க்கட்சியில் இருக்கும் விருப்பமில்லாத நபர்களை விட ஆளும் கட்சியிலேயே நான் விரும்பாத பலர் உள்ளனர் என ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment