Monday, March 10, 2014

கிரிக்கெட் போட்டிகளில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை



(Nf) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில், செயற்படுவதனை தடுப்பதற்கு கொழும்பு நகரிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



வாகனங்களின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துதல் மற்றும் மகளிர் பாடசாலைகளுக்குள் அத்துமீறி நுழைதல் போன்ற விடயங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.



அமைதியின்மையை தோற்றுவிக்கும் வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்படும் எனவும் பொலிஸார் கூறினர். இவ்வாறான பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment