Tuesday, April 15, 2014

பொதுபல சேனா 'பயங்கரவாத அமைப்பு' என பிரகடனம்



இலங்கையில் இயங்கும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா ஒரு “பயங்கரவாத அமைப்பு” என பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு (TRAC) என்ற அமைப்பினால் பெயரிடப்பட்டுள்ளது.



பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு (Terrorism Research & Analysis Consortium ) என்பது உலக நாடுகளில் அரசியல் வன்முறை தொடர்பில் ஆராச்சி மற்றும் பகுப்பாய்வு செய்யும் சர்வதேச நிபுணர்களை கொண்ட ஒரு ஆய்வு மையமாகும்.



பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் மென்மையான இலக்குகள் மீது பயங்கரவாத செயல்களை ஒத்ததாக இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் மீது வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைக் குறிப்பிடலாம்.



சட்டபூர்வமாக அவ்வமைப்புக்களைப் பட்டியலிட முடியாது. ஆனால் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிக்கை வெளியிட முடியும் என பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமைக்கான காரணத்தை அவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.




No comments:

Post a Comment