அமைச்சர் றிசாத் பதியூதீன் சம்பந்தப்பட்டுள்ள வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத குடியேற்றதை பொதுபல சேனா எதிர்ப்பது நியாயமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
பொதுபல சேனா, இந்த சட்டவிரோத குடியேற்றத்தை கடுமையாக எதிர்ப்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் எந்த நாடும் விலங்குகளுக்கு ஒதுக்கப்படும் வலயங்களில் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. அமைச்சர் றிசாத் பதியூதீன் வில்பத்து வனத்திற்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் மக்களை அங்கு குடியேற்றியுள்ளார்.
இது பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கை. வில்பத்து ஊடாக மன்னார் வரை வீதியொன்றை நிர்மாணிக்க தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment