Sunday, April 20, 2014

ஐக்கிய தேசிய கட்சியை இலத்திரனியல் மயப்படுத்த அவதானம் - கபீர் ஹாசிம்



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக அமைப்புகளை இலத்திரனியல் மயப்படுத்த அவதானம் செலுத்தப்படுள்ளது.



கட்சியின் தலைமைத்துவ உறுப்பினர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலைச் செய்யப்படும் வேட்பாளர் குறித்து உத்தியோக பூர்வ பற்றற்ற பேச்சுவார்தைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





ஊவா மாகாண சபை தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி விசேட வேட்பு மனு குழு மற்றும் தேர்தல் நடவடிக்கை குழுவையும் அமைக்க கவனம் செலுத்தியுள்ளதாக கபீர் ஹாசிம் தெரிவித்தார்.



அண்மையில் இடம்பெற்ற மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்களில் ஏற்பட்ட குறைப்பாடுகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். sfm


No comments:

Post a Comment