Friday, April 25, 2014

பேஸ்புக் மூலம் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது



பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



இணையத்தின் ஊடாக 15 வயதுக்கும் குறைவான சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சைபர் வோட்ச் என்னும் இணைய துஸ்பிரயோக தவிர்ப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கண்காணி;ப்பின் அடிப்படையில் குறித்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இணையத்தின் ஊடாக ஆபாச படங்களை காண்பித்து தகாதவாறு உரையாடிய குறித்த பல்கலைக்கழக பேராசிரியர், சிறுமியை நேரடியாக பார்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.



15 வயது சிறுமி போன்று உரையாடிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள், அதிகார சபையின் அருகாமையில் வருமாறு அழைத்து கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.




No comments:

Post a Comment