ஆண் புடையன் பாம்பொன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி கொத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று 24-04-2014 மாத்தளையில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை உக்குவரை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ்விடத்திற்கு வந்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
இவரது மரண விசாரணையில் மேற்படி நபர் மதுபோதையில் இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒரு சோடி புடையன் பாம்பை வேறுபடுத்தி தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்மை அடித்துக் கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் பாம்பு அவரை விரட்டி விரட்டி கொத்தியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment