Tuesday, April 15, 2014

உலகின் மிகச் சிறந்த இடங்களில் துபாய் முதலிடம்..!





(Tho) உலகில் காணவேண்டிய மிகச் சிறந்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாய் முதலிடம் பிடித்துள்ளது.



சுற்றுலா செல்பவர்களுக்காக பயண ஏற்பாடுகளை மேற் கொள்ளும் உலகின் மிகப் பெரிய இணையதளமான “ட்ரிப் அட்வைசர்”, 2014-ஆம் ஆண்டுக்கான ‘ட்ராவலர்ஸ் சாய்ஸ்’ விருதுக்காக உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோல்கள் கொண்டு பட்டியலிட்டது.அதில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது.மக்கள் கண்டுகளிக்க துபாயில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.



சுமார் ஒருவருடமாக உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளின் எண்ணிக்கைகள்,தரம் ஆகியவற்றைப் பற்றிய விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு 25 சிறந்த இடங்கள் பட்டியலிடப்பட்டன.



“25 சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத் தேர்வு செய்யப்பட்டிருபடன் முலம் நாங்கள் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்”என்றார் துபை சுற்றுலா மற்றும் வணிகக் கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலர் இஸாம் காஸிம்.இந்த ஆண்டு துபாயில் மாபெரும் உணவுத்திருவிழா நடைபெற்றது.உலக அளவிலான இசை,கலாச்சாரம்,விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன என்று காஸிம் தெரிவித்தார்.




No comments:

Post a Comment