Monday, April 14, 2014

றிசாட் பதியுதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜாதிக ஹெல உறுமய



அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.



அனுமதியின்றி வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்தமைக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



முஸ்லிம் மக்களை வடக்கில் சட்ட ரீதியாக குடியேற்ற வேண்டும் என்பதே ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் சட்ட ரீதியாக அல்லாமல் முஸ்லிம்களை கொண்டு எங்கும் குடியேற்றம் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.



அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத்திற்கு தெரியாமல் செயற்பட்டுள்ள அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment