Monday, April 14, 2014

குழந்தைகளின் சடலங்களை தோண்டியெடுத்து சமைத்து சாப்பிட்டவர்கள் கைது..!



பாகிஸ்தானின் ஒதுக்குப்புறமான டர்யா கான் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான முகம்மது ஆரிப் (35), முகம்மது ஃபர்மான் (30) ஆகியோரை சில ஆண்டுகளுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர்.



உள்ளூர் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 100 குழந்தைகளின் பிணங்களை தோண்டி எடுத்து, அவற்றை சமைத்து தின்றதாக இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து கடந்த ஆண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.



’இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது’ என்பது போல், நரமாமிசம் தின்றுப் பழகிப்போன இவர்கள் நாக்கும் சும்மா இருக்காமல் திணவெடுத்துக் கொண்டே இருந்தது.



இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து ஒருவகையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையொட்டி, நேற்று காலை விரைந்து வந்த போலீசார் வீட்டினுள் ஒரு சிறுவனின் தலை மட்டும் கிடப்பதை கண்டு, சகோதரர்களில் ஒருவனான முகம்மது ஆரிப்பை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் முகம்மது ஃபர்மானை தேடி வருகின்றனர்.



தலைக்குரிய சிறுவனின் பிணம் எந்த கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது? வேறு ஏதேனும் பிணங்களை இவர்கள் தின்று தீர்த்திருக்கிறார்களா? என்பது தொடர்பாக ஆரிப்பிடம் விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment