Sunday, April 27, 2014

அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி





(ஏ.எல்.ஜனூவர்)



2014 ஆம் ஆண்டுக்கான அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி (நேற்று) 26.04.2013 அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துரை அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களும் கலந்து கொண்டார்.



இப்பிரதேசத்தில் பல விiளாயட்டுக் கழகங்கள் இப் போட்டிகளில் கலந்து கொண்டது. எனினும் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் 9வது தடவையும் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.



இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்;.நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ். ஊவைஸ் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வீரர்களும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment