(JM.HAFEEZ)
ஜே.ஆh.;ஜயவர்தனாவின் ஆட்சிகாலத்தில்தான் கசினோ சூதாட்ட அனுமதிப் பத்திர முறை கொண்டுவரப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரண மாக கசினோக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா தெரிவித்தார். கண்டி செயலகத்தில் இடம் பெற்ற ஒரு கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
ஜே.ஆர்.ஜயவர்தனா மற்றும் ஆர்.பிரேமதாசா ஆகியோர்காலத்தில்தான் சூதாட்டங்களை மேற்கொள்ளும் கசினோ முறை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரனில் விக்கிரம சிங்க அவர்கள் அமைச்சராக இருந்தார். அன்று ஜெக்போர்ட் என்ற இயந்திரம் கிராமங்கள் தோரும் பொருத்தப்பட்டு மூலை முடுக்கெல்லாம் சூதாட்டம் இடம் பெற்றது.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 50 மில்லியனாக இருந்த அனுமதிக்கட்டணத்தை 100 மில்லியன் ஆக உயர்த்தியதால் ஜெக்போர்ட் எண்ணிக்கை மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. அன்று போல் பரவலாக இல்லாமல் இன்று நாட்டில் 50 அல்லது 60 கெசினோ நிலையங்கள் மட்டும்தான் உள்ளன.
1988ம் ஆண்டு ஜே.ஆர். ஆட்சிகாலத்தில் முன்வைக்கப்பட்ட சட்டத்தின் மூலமே இன்றும் அது நடைபெறுகிறது.
இருப்பினும் மகா சங்கத்தினர் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப புதிதாக கெசினோ நிலையங்களை அமைப்பதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இயன்றளவு அதிக தூரத்திலே அவற்றை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பௌத்த தேரர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் எதிர்ப்பை அடுத்து புதிதாக அமைக்கப் படும் ஹோட்டல்களில் கசினோ இடம்பெற மாட்டாது.
இலங்கைக்கு சுற்றுலாத்துறையினர் அதிகம் வருகை தருகின்றனர். அவர்களுக்த் தேவையான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுற்றுலாத் துறையினரையும், முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். ஹோட்டல்களில் தங்கி நிற்கும் சுற்றுலாத் துறையினருக்கான வசதிகள் செய்து கொடுக்கப் பட வேண்டும். மலேசியா ஒரு முஸ்லிம நாடு. அங்கு இஸ்லாமிய சட்ட திடடங்கள் பின் பற்றப்படுகின்றன. இருப்பினும் தனியான தீவுகளில் சுற்றுலாத்துறைக்கான கசினோவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் டுபாய் ஹோட்டல்களில் எல்லாமே உண்டு. மாலைத் தீவில் மதுச் சட்டம் கடுமையாக உள்ளபோதும் அங்குள்ள தனியான 187 தீவுகளில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் மதுபான வசதிகள் மற்றும் கெசினோ வசதிகள் உற்பட sஉண்டு. நாம் சிங்கப்பூர், தாய்லந்து மட்டத்தில் எமது சுற்றுலாத் துறையை வளர்ப்பதாயின் முதலீட்டாளர்களுக்குத் தேவையான குத்தகை வசதிகளையும் சலுகைகளையும ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அன்று கெசினோ ராஜாக்கள் ஐ.தே.க. உடன்தான் இருந்தார்கள். ஜெக்போர்ட்டை கொண்டு வந்து அறிமுகப் படுத்தியவர்கள் நாங்கள் அல்ல என்றார்.
No comments:
Post a Comment