துபாயில் உள்ள, 60 அடுக்கு ஓட்டலின், ஹெலிகாப்டர் தளத்தில், திருமண விழாக்களை நடத்த, ஓட்டல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. துபாயில், ஜூமைரா கடற்கரையில், செயற்கையாக அமைக்கப்பட்ட தீவில், 60 அடுக்கு ஓட்டலான, "புர்ஜ் அல் அராப்' என்ற ஓட்டல் செயல்படுகிறது.
உலகின், நான்காவது மிகப்பெரிய ஓட்டலாக இது திகழ்கிறது. 212 மீட்டர் உயரமுள்ள இந்த ஓட்டல், பாய்மரத்தை போன்ற உருவத்தை கொண்டது. இதன் மேல் தளத்தில் ஹெலிகாப்டர் தளம் உள்ளது. மேல் தளத்திலிருந்து, துபாய் முழுவதையும் பார்க்க முடியும். தற்போது இந்த ஹெலிகாப்டர் தளத்திலும், திருமண நிகழ்ச்சிகளை நடத்த, ஓட்டல் நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஆரம்ப கட்ட வாடகையாக, 33 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் வசதி, உடைகள், உணவு கள் என, அனைத்தும் இந்த ஓட்டலில் கிடைக்கிறது.
No comments:
Post a Comment