நபரொருவரின் கை,கால்களை கட்டி, தாங்கி ஒன்றினுள் போட்டு அத்தாங்கிக்குள் நாகப்பாம்பொன்றையும் போட்ட நபர்களை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை,கால்களை கட்டிபோட்டவரை அந்த பாம்பு தீண்டியுள்ளதாகவும் அதனையடுத்தே அப்பாம்பை அடித்துகொன்றுவிட்டு சந்தேகநபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், செவனகல வெவெரியாகம பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.
காணி பிரச்சினை காரணமாகவே சந்தேகநபர்கள், அவரை கட்டிபோட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தாங்கிக்குள் போடப்பட்ட இரண்டு பிள்ளைகளில் தந்தையான 45 வயதான நபரே பாம்பு தீண்டிய நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment