தாய்மை அடைய வேண்டுமாயின் தெற்காசியாவில் சிறந்த நாடு இலங்கை என சேவ் த சில்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள 2014 ம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை 2003ம் ஆண்டும் இதற்கு முன்னர் இந்த இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில், 11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அந்த இடத்தை பிடித்துள்ளது.
பெண்கள் தாய்மை அடைய சிறந்த 178 உலக நாடுகளில் இலங்கை 89 வது இடத்தில் உள்ளது.
தெற்காசியாவில் வலுவான நாடாக கருதப்படும் இந்தியா 137வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 147வது இடத்திலும் பங்களாதேஷ் 130 இடத்திலும் உள்ளன.
இந்த பட்டியலில் அமெரிக்கா 31 வது இடத்தில் உள்ளது.
சேவ் த சில்ரன் அமைப்பு இந்த தரப்படுத்தலை மேற்கொள்ள தாய் சேய் சுகாதார நிலைமை, கல்வி தரம், பொருளாதார நிலைமை, பெண்கள் அரசியலில் சம்பந்தப்பட்டுள்ள எண்ணிக்கை போன்றவற்றை கவனத்தில் எடுத்துள்ளது.
No comments:
Post a Comment