Saturday, May 31, 2014

அரசாங்கத்திற்கு கெட்டகாலம் தொடங்கி விட்டது - முஜீபுர் ரஹ்மான்



தேசிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ ஒரு சிறந்த நடிகர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,



இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்கும் முன்னரே அவரை இலங்கைக்கு வருகை தருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தது.



விமல் வீரவன்ஸ இரண்டு, மூன்று கூட்டங்களை நடத்தி அரசாங்கத்தை விமர்சித்ததும், அவரது 12 யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கினார்.



வாக்குகள் பிரிந்து விடும் என்று ஜனாதிபதி பயந்தார். விமல் அரசாங்கத்தில் இருந்து வெளியேற மாட்டார். அவர் ஒரு சிறந்த நடிகர்.



அரசாங்கத்திற்கு கெட்டகாலம் தொடங்கி விட்டது என்ற புரிந்து கொண்ட விமல் இந்த நாடகம் நடிக்க ஆரம்பித்து விட்டார்.



உண்மை எது பொய் எது என்பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும் என்றும் முஹிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment