Thursday, May 29, 2014

பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்





(ஏ.எல்.ஜனூவர்)



பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம் பெற்றது.



இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாசித், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத், உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர், சட்டத்தரணி எம்.எம்.எம்.பஹ்ஜி, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பதுர்கான், உட்பட அரச திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.












No comments:

Post a Comment