பொதுபலசேனா ஒழுங்கு செய்த கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த சுமார் 14 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் சிறுவன் ஒருவனை பொதுபலசேனாவின் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கியதுடன் சிறுவனை பதுளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பதுளை பஸ் தரிப்பு நிலையத்தில் இடம் பெற்ற கூட்டத்தின் போது மேற்படி சிறுவன் பொதுபலசேனாவினரால் தாக்கப்பட்டுள்ளான்.
பொதுபலசேனாவின் கூட்டமொன்று பேரணியும் நேற்று பதுளையில் இடம் பெற்றது. பதுளை முதியங்கனை விகாரைக்கு அருகில் இருந்து ஆரம்பமான பேரணி பஸ் தரிப்பு நிலையத்தை வந்ததடைந்தது. அங்கு கூடிய பொதுபலசேனாவினர் கூட்டமொன்றையும் நடத்தினர். இக் கூட்டத்தில் மேற்படி முஸ்லிம் சிறுவன் நின்றிருந்த போது அவனை இனங்கண்ட பொதுபலசேனா ஆதரவாளர்கள் நீ முஸ்லிம் தானே உன்னை யார் இங்கு வரச் சொன்னது என ஆக்ரோஷமாக கேள்விகளை தொடுத்ததுடன் சிறுவன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி னர்.
அத்துடன் அருகில் நின்றிருந்த பொலிஸாரிடம் சிறுவனை ஒப்படைத்தனர். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டதாக தெரிவி க்கப்படுகிறது.
No comments:
Post a Comment