Monday, May 5, 2014

தென்கொரியாவில் இலங்கையர், இலங்கையரை கொன்றார்..!



தென்கொரியாவின் க்வான்ஜூன் அசுன் என்னும் இடத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். கொடூரமான முறையில் கத்தி குத்துக்கு இலக்காகி குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.



அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான தஹாம் அமரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பணியிடத்தில் சக இலங்கையர் ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகியே அமரசிங்க உயிரிழந்துள்ளார்.



பத்து இடங்களில் கத்தி குத்துக் காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




No comments:

Post a Comment