Tuesday, May 6, 2014

தெளஹீத் ஜமாஆத் விவகாரம் - நீதிமன்றத்தில் பேசப்பட்ட விவகாரம்..!



பெளத்த சம­யத்­துக்கு அவ­தூறு கூறி அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள சிறீ­லங்கா தெளஹீத் ஜமா அத்தின் பொதுச் செய­லாளர் ஆர்.அப்துர் ராஷிக்கை 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீ­ரப்­பி­ணையில் விடு­தலை செய்த நீதி­மன்றம் அவர் வெளி நாடு செல்­வ­தையும் தடை செய்­த­துடன் அந்த அமைப்பின் ஏனைய முக்­கிய உறுப்­பி­னர்­க­ளிடம் வாக்கு மூலம் பதிவு செய்­யு­மாறும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்­டது.



மேல் மாக­ணத்­திற்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­தி­ருந்த மனு மீதான விசா­ர­ணை­களின் போதே புதுக்­கடை முதலாம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய மேற்­கண்­ட­வாறு உத்­த­ரவு பிரப்­பித்தார்.



கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவில் தேரர் ஒருவர் செய்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக அந்த பிரிவால் விஷேட விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.



இதன் படி நேற்­றைய தினம் வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு ஆஜ­ரா­கு­மாறு தெளஹீத் ஜமா அத்தின் செய­ளா­ல­ருக்கு நீதி­மன்­ரினால் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன் படி பிர­தி­வா­தி­யான குறித்த அமைப்பின் செய­லாளர் அப்துர் ராஷிக் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் அவர்­சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ரண­வக தலை­மையில் எஸ்.பீ.ஹபீல்,சப்ராஸ் ஹம்ஸா, ரமீஸ் பஸீர் ஆகியோர் உள்­ள­டங்­கிய சட்­டத்­த­ர­ணிகள் குழு ஆஜ­ரா­கி­யி­ருந்­தது.



முறைப்­பாட்­டாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க , கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் தேரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணிகள் குழு ஆஜ­ரா­கி­யி­ருந்­தது.



இதன் போது மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய பிர­தி­வா­தி­யினால் இணை­யத்­த­ளத்­துக்கு வெளி­யி­டப்­பட்­டுள்ள வீடி­யோவில் புத்தர் மனித மாமிசம் சாப்­பிட்­ட­தா­கவும், புத்­தர்கள் மூன்ரு மாணிக்­கங்கள் எனக் கூரி கல்லை வணங்கும் மடை­யர்கள் எனக் கூரி முழு பெளத்த சமூ­கத்­தையும் ஆத்­தி­ரத்­துக்கும் கவ­லைக்கும் உள்­ளாக்­கி­யி­ருப்­ப­தாக குறிப்­பிட்டார்.



இத­னி­டையே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன நாயக்க, முறைப்­பாட்­டுக்கு அமை­வாக அனைத்து ஆதா­அ­ரங்­க­ளையும் திரட்டி விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் சட்ட மா அதி­பரின் உத­வி­யையும் நாட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.



எவ்­வா­றா­யினும் இதன் போது குறுக்­கிட்ட சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய தெள்ஹீத் ஜமா அத் ஒரு பயங்­க­ர­வாத அமைப்பு எனவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் மன்றை கோரினார். வெளி நாட்­டி­லி­ருந்து அந்த அமைப்பு நிதி பெறு­வ­தா­கவும் இதன் போது அவர் குற்றம் சுமத்­தினார்.



இதனை அடுத்து அதனை நிரா­க­ரித்த தெளஹீத் ஜமா அத் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி ரண­வக அவ்­வாறு நிதி பெறு­வ­தென்­பதை முடிந்தால் நிறூ­பிக்­கு­மாரு சவால் விடுத்தார். அத்­துடன் யூ டியூபில் வெளி­யா­கி­யுள்ள குறித்த புத்த அவ­ம­திப்பு கருத்­துக்­களைக் கொண்ட வீடி­யோவை முற்­றாக அதி­லி­ருந்து நீக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார். அத்­துடன் இந்த விவ­கா­ரத்தை சமா­தா­ன­மாக முடித்­துக்­கொள்ள விரும்­பு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். தமது கட்சிக் காரர்கள் இதன் பின்னர் பெளத்தம் உள்­ளிட்ட எந்­த­வொரு மதம் தொடர்­பிலும் விமர்­ச­னத்தில் ஈடு­பட மாட்­டார்கள் எனவும் அவ்­வாறு ஏதேனும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டால் அதிக பட்ச தண்­டனை வழங்­கு­மாரும் குறிப்­பிட்டார். அத்­துடன் தமது கட்­சிக்­கா­ர­ருக்கு பிணை வழங்­கு­மாறும் அவர் கோரினார். எனினும் அதற்கு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹேமந்த வர்­ண­கு­ல­சூ­ரிய கடும் எதிர்ப்புத் தெரி­வித்தார்.



எனினும் இரு தரப்பு வாதங்­க­ளையும் ஆராய்ந்த நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டிய பிர­தி­வா­திக்கு 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் செல்ல அனு­ம­தித்தார். அத்­துடன் பிர­தி­வா­தியின் கடவுச் சீட்டை தேசிய புல­னாய்வுப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கு­மாறு உத்தரவிட்ட அவர் ஒவ்வரு வெள்ளிக்கிழமையும் பிரதிவாதி பிற்பகல் இரண்டு மணிக்கு கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.



அத்துடன் தெளஹீத் ஜமா அத்தின் ஏனைய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சென்று வாக்கு மூலம் அளிக்குமாரும் அவர் உத்தரவிட்டார்.



இதனை அடுத்து அந்த வழக்கான து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment