Wednesday, May 7, 2014

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை




போதைப் பொருள் பரவலை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை அரசாங்கம் எடுக்க தவறியதாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த அரசாங்கத்த்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



இந்த மாதம் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.



ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்கவினால் கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இந்த பிரேரணை பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.




No comments:

Post a Comment