Monday, May 26, 2014

'அடிப்படைவாத சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரித்தார்'





வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அடிப்படைவாத சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். வடக்கில் தொடர்ந்தும் இயங்கி வரும் கடும்போக்குடைய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவேவே இவ்வாறு விக்னேஸ்வரன் நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.



ஜனநாயக ரீதியில் அமைதியான சூழ்நிலையில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபையின் முதலமைச்சர், பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணியக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment