Monday, May 26, 2014

இனவாதத்தையும், மதவாதத்தையும் புத்தர் முற்றுமுழுதாக நிராகரித்தார் - அமைச்சர் ராஜித்த



இனவாதிகள் மற்றும் மதவாதிகளினால் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.



மத்துகமவில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



கௌதம புத்தர் இனவாதம், மதவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை முற்று முழுதாக நிராகரித்தார்.



மனித நேயத்தை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது பற்றியே கௌதம புத்தர் வழிகாட்டி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.



88ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற காலத்தில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் வடக்கிற்கு விஜயம் செய்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியிருந்தேன்.



ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் போன்ற அமைப்புக்களுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.



சகல தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடனும் இணைந்து நான் செயற்பட்டிருக்கின்றேன்.



பயங்கரவாதத்தை நான் நிராகரித்தேன்.



இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது முதல் நான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment