Monday, June 30, 2014

கடத்தப்பட்ட 3 இஸ்ரேல் மாணவர்கள் சடலங்களாக மீட்பு




கடந்த மாதம் கடத்திச் செல்லப்பட்ட 3 இஸ்ரேல் வாலிபர்களின் பிரேதம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.



கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த 3 இளைஞர்களையும் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டியது.



இதனையடுத்து, பாலஸ்தீனத்தில் உள்ள பல முக்கிய நகரங்களுக்குள் நுழைந்து அவர்களை தேடி, கண்டுபிடித்து விடுவிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டும் எந்த பலனும் கிட்டவில்லை.



இந்த தேடுதல் வேட்டையின் போது 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், கடத்தப்பட்ட மாணவர்களின் கதி என்னவாயிற்று? என்பது புரியாத புதிராகவே நீடித்து வந்தது.



இந்நிலையில், பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே உள்ள ஹெப்ரான் நகருக்கு அருகாமையில் இருக்கும் ஹல்ஹுல் கிராமத்தில் கடத்தப்பட்ட இஸ்ரேல் மாணவர்களான நஃப்தலி பிரயென்கெல்(16), கிலட் ஷார்(16), இயால் இஃப்ராச்(19) ஆகியோரின் பிரேதங்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment