(எம்.வை.அமீர்)
இன்று 30-06-2014 மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த குழுக்களில் எவர் முன்பாக இருக்கின்ற திடலை பாவிப்பது என்ற விடையத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கல் வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றன. அத்துடன் குழுவினரால் இஸ்தாபிக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும் பிரசைகள் குழுவினரும் குழுக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment