Friday, June 20, 2014

'மஹிந்தவிற்கு ஆலோசனை வழங்க 38 ஆலோசகர்கள்' - 4,14,00824.81 ரூபா செலவு



ஜனாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கென அங்கீகரிக்கப்பட்ட 38 ஆலோசகர்கள் இருப்பதாகவும் இந்த ஆலோசகர்களுக்கென கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 4,14,00824.81 ரூபா செலவு ஏற்பட்டதென அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தொடர்பான வினாவுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன.




No comments:

Post a Comment