பண்டாரகம பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை தாக்குதல் காயங்களுக்கு உள்ளாகி நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்ட ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளரான வட்டரக்க விஜித தேரருக்கு பலாத்காரமாக சுன்னத் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்க விஜித தேரரின் மர்ம உறுப்பு பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
சுன்னத் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அது பலனளிக்காத நிலையில் மர்ம உறுப்பு பகுதியில் காயங்கள் காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கு ஆதரவானவராக கடும்போக்கு பௌத்த பிக்குமாரால் விமர்சிக்கப்பட்ட ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் தாக்குதலுக்கு உள்ளாகி வீதியில் கிடந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டார்.
கடுமையான காயங்களுக்கு உள்ளான அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
சில பிக்குமாரே தன்னைத் தாக்கியதாக வட்டரக்க விஜித தேரர் தன்னிடம் கூறியதாக அவரது சட்டத்தரணி கூறியுள்ளார். ஏற்கனவே கடும்போக்கு பௌத்த அமைப்புக்களால் மிரட்டலுக்கு உள்ளாகியிருந்த அவருக்கு- போதுமான பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தினாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார். An
No comments:
Post a Comment