தேசிய பலசேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள், விஜித தேரரை கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.
பாணந்துறை ஹிரனம பாலத்திற்கு அருகாமையில் விஜித தேரர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தேரரின் தேசிய அடையாள அட்டை அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த விஜித தேரர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தேரரிடம், தற்போது வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment